பட்டுக்கோட்டை பிரபாகரின் "தொட்டால் தொடரும்"- ரொம்ப காலம் கழித்து படிக்கிற தமிழ் நாவல் . சுஜாதா ஒரு முறை பரிந்துரைத்த ஞாபகம், சமீபத்தில் படித்த அவரது சிறுகதை ஒன்று; இரண்டும் ரங்கா லெண்டிங் லைப்ரரி இல் ப.ப rack பக்கம் என்னை செலுத்தியது. Random ஆக கையில் மாட்டியது தொ.தொ.
ப.ப-தொ.தொ.. அட! (இது தான் இவரின் முதல் நாவல் என்று பிறகு தான் தெரிந்தது. இன்னொரு அட!)
பட்டுக்கோட்டை பிரபாகரின் நடை refreshing ஆக இருக்கிறது. உரையாடல்களில் சிரத்தை தெரிகிறது. சுஜாதா வின் hand-waving ரகத்தையும் சேராமல் அதே சமயம் பாலகுமாரன் போல வள-வள என்று பல பக்கங்களுக்கு ஒரே விஷயத்தை விவாதிக்காமல் புது விதமாக உள்ளது. இந்த நாவலில் வசந்தி-ஸ்ரீராம் உரையாடல்கள் பலவும் ரசிக்க வைத்தன . அதில் என்னை கவர்ந்த ஒன்றை இங்கு ப்ளாக் செய்கிறேன்.
வசந்தி-ஸ்ரீராம் முக்கிய பாத்திரங்கள்.. வயது:- நாவல் முடிவில் திருமணம் செய்து கொள்கிற வயது. இந்த பகுதியில், they are getting acquainted, என்ற அளவில் உங்களுக்கு புரிந்தால் போதும்.
~~
"என்கிட்டே பேசிக்கிட்டிருக்கறதிலே உங்களுக்கு எதுவும் இடைஞ்சல் இல்லையே?.."
"இல்லை"
"ஒரு அந்நிய ஆம்பிளை கிட்டே தனியா பேசிக்கிட்டிருக்கோமேனு நினைக்கறீங்களா"
"இல்லை. மனுஷங்களோட தராதரம் தெரியும். தவிர, என்னை எனக்கு தெரியும்"
"உங்க பதில்ல, என்னை எனக்குத் தெரியும்ங்கிற வார்த்தைகள்ல ஒரு அழகு இருக்குங்க... அது எனக்குப் பிடிச்சிருக்கு. அழகைப் பத்தி என்னை நினைக்கறீங்க.?"
"எதோட அழகை?"
"எதெதில அழகிருக்கு?"
"அது அவங்கவங்க மனசுக்கு மாறுபடும்"
"உங்க மனசுக்கு பட்ட அழகுகளை சொல்லுங்களேன்"
"காலை மலர், கண்ணடிக்கிற பட்டாம் பூச்சி, பெண்களின் கண், மழை நாளின் வானவில், தொலைதூரத்தில் ஓடும் ரயில்..." (My god! Google Indic. I love you!)
"இதெல்லாம் மட்டும்தான் அழகா..? கண்கள் நமக்கு உணர்த்தற விஷயங்களா சொன்னீங்க .. இதிலேயே இன்னும் விரிவா போனா கண்கள் மூளைக்கு உணர்த்தி மூளை ஒரு அர்த்தம் கொடுதுக்கறப்போ, புதிய அழகுகள் தெரியும்"
"இப்பதான் ஆர்டிஸ்ட்டா லட்சணமா சுத்தமா புரியாத விதத்தில பேசறிங்க.."
"என்ன புரியலை..? அதோ, நான் கழட்டி போட்ட செருப்புகளைப் பாருங்க. எதேச்சையா ரெண்டும் அமைஞ்சிருக்கிற விதத்தைப் பாருங்க.. ஒண்ணு, காதலன் , ஒண்ணு காதலி, ரெண்டும் கிஸ் பண்ணிகிட்ருக்கற மாதிரி இல்ல? பார்வையிலே இந்த அர்த்தம் கிடைக்காது. இதை மூளை தான் கற்பிச்சுக்கணும். அப்போ இந்த செருப்புகளோட காட்சியே அழகாகத்தான் தெரியும்."
அவனை பிரமிப்பாய் பார்த்தாள் வசந்தி.
"காலைல பேப்பர் 'சர்'னு கதவுக்கடியிலே ஊர்ந்து வந்து, பிரிஞ்சு விழறதிலே ஒரு கவிதையே இருக்கு. காலண்டர்ல காகிதங்கள் துடிக்கறதிலே ஒரு அவசரம் இருக்கு. எண்ணெய் பேப்பர்ல ஒட்டி இருக்கிற கொசு ஒரு சோகத்தை சொல்லுது. இப்படி எல்லாமே எனக்கு ஒரு அர்த்தத்தைச் சொல்லுதுங்க. சும்மா சொல்லுங்க என்னை நினைக்கறீங்க இந்த நிமிஷம். சரியான 'செமி'ன்னா?.. "
"அய்யய்யோ! அப்படி எல்லாம் இல்லைங்க. நீங்க சொன்னதைக் கேட்டப்புறம், உங்க ஓவியம் எல்லாம் பார்க்கணும்னு ஆர்வமா இருக்கு."
"வெல்கம். ஆனா, இப்ப வேணாம். ரூமைக் கொஞ்சம் சுத்தம் பண்ணிட்டு நானே கூப்பிடறேன்", என்று எழுந்தான் ஸ்ரீராம்.
~~
இவர்களின் மற்றொரு உரையாடல் என்னை இன்னும் கவர்ந்தது; சில not-so-acceptable கருத்துகள் உள்ளதால் அதை ப்ளாக் செய்ய வேண்டாமென படுகிறது. அதில் "Dadaism" என்ற 1920களில் Zurichஇல் உருவான ஒரு conceptஐ ஸ்ரீராம் மூலம் அறிமுகப்படுத்துகிறார் பட்டுக்கோட்டை. ரகளையான ஒரு தத்துவம் இந்த "Dadaism". சம்ப்ரதாயதுக்குட்பட்டு செய்யப்படும் கலை இலக்கியங்களை எட்டி உதை என்கிறது இது. உதாரணத்திற்கு, இந்த ப்ளாக் தலைப்பை "Interesting Excerpts" என்பதற்கு பதில் தமிழுக்கு ஏற்ப "புத்தக துகள்" என்று வைக்கலாம் என்று முதலில் தோன்றியது. " 'புத்தகத்துகளா'? எதோ சரியில்லையே.! அசிங்கமா கலாய்ச்சுடுவாங்க" என்று பயந்து "Interesting Excerpts"இற்கே திரும்பினேன். இப்படிப்பட்ட ஒருத்தனை-என்னைத் தான்!- ஒரு Dadaist புழுவைப் பார்ப்பது போல பார்ப்பான். என்ன கண்றாவி மனதில் தோன்றினாலும் அதை அப்பட்டமாக எழுத வேண்டும், வரைய வேண்டும், பாட வேண்டும். பிறரின் ரசனை, பார்வை, morals இதை எல்லாம் பற்றி கவலை பட கூடாது. 'மரபுகளின் மண்டையை பிள' என்ற Dadaism, இன்றைய Modern art, Neo-musical styles ஆகியவற்றுக்கு முப்பாட்டனாகத் திகழ்கிறது. சாங் ரெக்கார்டிங் இன் போது ஏதோ காரணத்தால் சித்ரா மளுக்கென சிரித்துவிட்டால், இளையராஜா காச்-மூச்சென திட்டி மறுபடி பாடச் சொல்லுவார். ரஹ்மான் ஒரு மினி-தாதாயிஸ்ட். அதையும் ஒரு புன்சிரிப்போடு சேர்த்துக்கொள்வார். இப்படி ரசிக்கத்தக்க பல மரபு-மீறல்களை இவர் இசையில் கேட்க முடியும். நண்பன் ஒருவனது இந்த ப்ளாகும் தாதாயிசத்தை தழுவி எழுதப் படுவதாகத் தோன்றுகிறது.
மேலே விடாமல் 'கர கர'
தாகம் வேறு
டி.வி.திரையில் ட்யூப் லைட்
பேரபோலா பாத்தில் கொசு
ஒரு வார அவஸ்தையோ?
தூக்கம் வருகிறது!
அடியேன் எழுதிய Dadaist 'கவிதை'.
மண்டை காயாமல் மேலும் தெரிந்து கொள்ள அவா உள்ளவர்கள் கூகுளை தொடர்பு கொள்ளவும் .
P.S: உங்களுக்கு தோன்றுகிற தாதாயிச "கவிதைகளை" comment sectionஇல் பதிவு செய்யவும். குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப் படுகிறவர்களுக்கு தாதாயிச 'வழக்கப்' படி பட்டா கத்தி ஒன்று பரிசாக வழங்கப்படும்.! வழங்கும் போது ஒரு urgeஇல் சரக்கென குத்தவும் வாய்ப்புண்டு; தாதாயிசம் "பேஷாக செய்" என்கிறது! Anyway, தைரியமாக எழுதவும்.
996. How to have the perfect beard look
6 years ago
.jpg)
dai.. some (i dont want to quantify how much 'some' is!) spelling mistakes are there in the post. It is spoiling the sense.
ReplyDeleteActually sriram is like me i guess...
We both see unseen beauties of the unnoticed ;)
Btw, i never thought that you would like PP's novels!
Please send me that 'unblogged'(unplugged!) conversation between them. I Loveeeeeeee controversies ;)
If you want me to write something with 'dadaism' in mind, then i need to search for my exam papers.. LOL
oh sorry. Google indic ah romba nambitten. :D
ReplyDelete"If you want me to write something with 'dadaism' in mind, then i need to search for my exam papers"
That wont come under Dadaism as exams are written under compulsion.;)
Try writing something anew!
and i've added a few lines towards the end of the post in addition to correcting the spelling mistakes. Check out!
ReplyDelete