Monday, March 8, 2010

விண்ணைத் தாண்டி வருவாயா - Mini Review

ரிலீசான மூன்றாவது நாளே பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. சென்ற வாரம் சனிக்கிழமை சாயங்காலம் சங்கம் வெப்சைட்டை கேட்ட போது அடுத்த நாள் நூன் ஷோவிற்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக பிச்சுப் போட்டது போல் சில சீட்கள் இருப்பது தெரிந்தது.. அன்றைய Sports shoes, Tshirts shopping ப்ளானோடு இதுவும் தொத்திக் கொண்டது.
--
"... "பச்சைக் கிளி முத்துச்சரம்".. எப்டி சார் இந்த பேரை தேர்ந்தெடுத்தீங்க?"
"ஒரு முத்து மாலைய ஒரு கிளி கிட்ட கொடுத்தா என்ன செய்யும்? பிச்சு பிச்சு போட்ரும். அந்த மாதிரி இந்த படத்துல... "
--
எதோ சேனலில் கெளதம் மேனனின் பேட்டி. "This guy is a crackpot" என்று அன்றே தோன்றிவிட்டது. ரஹ்மானின் அற்புதமான composings படத்தில் எப்படி வந்திருக்கிறது என்று பார்பதற்கே சென்றேன் என்று சொல்லலாம் (ஓமான பெண்ணே, ஆரோமலே ரெண்டையும் சுமார் பத்தாயிரம் முறை கேட்டிருப்பேன்.) . போதாக்குறைக்கு த்ரிஷா எல்லா சீன்களிலும் sareeஇல் வருகிறாளாம் !.

"ஒழியறது பணம். Let's go!"

நினைத்தது போல் immature ஆக handle செய்திருக்கிறார் கெளதம். படம் முழுக்க சிம்பு-த்ரிஷாவின் loveஆ friendship ஆ வளவளாக்கள்- அதுவும் ஏதோ பாம்ப் வைக்கப் போவது போல் ஒரு அனாவச்யமான seriousness ஓடு. . ஒரு கட்டத்தில் சலித்து போய் விடுகிறது. ஓங்கி சிம்புவை அறைந்துவிட்டு "Mechanical engg படிச்சுட்டு director ஆகணும்னு ஆச படற. அதுக்கு மொதல்ல வழிய பார்டா." என்று கத்த வேண்டும் போல தோன்றியது.

"என்னடி இப்படி பண்ணிட்டு வந்து நிக்கற?"
...
"I will not allow this marriage"
..
"நான் consumer courtஉக்கு போவேன்"
..
"டேய்..! நீ அவளத் தானே பாக்கற?"

சம்ப்ரதாயமான அப்பா, அம்மா, தங்கை கதாபாத்திரங்கள்.. Yaawwn!

இது ஒரு Puppeting effect. Directorஒரு flow வை நிச்சயிதிருப்பார். எல்லா பாத்திரங்களையும் அடக்கி அந்த flowவுக்கு ஏற்றபடி நடந்து கொள்ள வைப்பார். விளைவு- உயிரற்ற கதாபாத்திரங்கள். compile and run குடுத்த program போல.

Pulp Fiction படத்தில் ஒரு காட்சி. Travoltaவும் Samuel Jackson உம் hitmen. நாலைந்து பேரை போட்டு தள்ளும் ஒரு மிஷனுக்கு செல்லும் முன் சர்வ சாதரணமாக foot-massage பற்றி பேசி கொள்ளும் ஒரு சீன்.


கடைசியில் ஜாக்சன் ட்ரவோல்டாவை நோக்கி லேசாக தலையை சாய்க்க "Its NOT a date" என்று அழுத்தமாக ட்ரவோல்டா சொல்லும் இடம் அடடடா!
ரொம்ப பொருத்தமான ஒரு Youtube comment. --> "Every scene is [a] fuckin epic!!! "

இந்த கருத்தை அண்டர்லைன் செய்ய ஆங்கில படங்கள் தான் வேண்டும் என்பதில்லை. அலைபாயுதே விலும் இம்மாதிரி கட்சிகள் பல. உதரணத்திற்கு மாதவன் ஷாலினி பெற்றோர்கள் சந்தித்து கொள்ளும் இடம். வந்த உடனே இந்த matterஐப் பற்றி பேசியே வேண்டும் என்றில்லாமல்
"காபி கெடைக்குமா ? சக்கரை இல்லாம. இவளுக்கு வேண்டாம். சாப்ட மாட்டா"
பாத்திரங்களின் அமைப்பை யோசித்து வைத்துக்கொண்டு அவர்கள் போக்கில் விட்டு விட்டால் கதை தானாக உருவாகும். Fresh ஆக. ரசிக்கும் படியாக. இதே விளக்கத்தை ராண்ட் "Fountainhead" நாவலில் உபயோகித்திருக்கலாம்.
"Altruism creates a very boring society."
இவ்வளவு விளக்கியதற்கு மெயின் ரீசன் இந்த படத்தைப் பற்றி பலரும் "ஆஹா. ஓஹோ" கொட்டுவதுதான்.
எப்படி இப்படி ஒரு படு மொக்கை பலரையும் கவர்ந்தது? கேள்வியிலேயே பதில் இருப்பது ஒரு புறம். (காந்திக்கு South Africa வில் உதவிய Symonds தமாஷாய் ஒரு முறை சொன்னார் "I will withdraw my support if you are ever found... in a majority!".)
இருந்தாலும் எதாவது ஒரு கரணம் இருக்க வேண்டும். Maybe சிம்பு-த்ரிஷா காட்சிகளின் backgroundஇல் அவர்கள் வாழ்கையில் நடந்த, நடக்கின்ற, நடக்கும் என்று நம்புகிற காதல் அனுபவங்களை ஒட்டி ரசித்து கொண்டிருக்கிறார்களோ என்னவோ. (நானே ரெண்டு மூணு சீன்களில் கொஞ்சம் கவிழ்ந்து விட்டேன்.)
சமீபத்திய வெட்டு, குத்து, "போட்றா கம்னாட்டிய" படங்களுக்கு மத்தியில் அரிதாக வந்திருக்கும் லவ் film வேறு. தப்பிப் பிழைத்துக் கொள்கிறது "விண்ணைத் தாண்டி வருவாயா "
கெளதம் இப்படியே எவ்வளவு காலம் இசை, cinematography இன் அழகிற்குப் பின் தன் directorial imperfection ஐ மறைத்து கொள்ள முடியும் தெரியவில்லை.

4 comments:

  1. i saw the film in telugu..being a tamilian that was missing..:) But the telugu version has a happy ending.

    write in more often!

    ReplyDelete
  2. A film is not always a director's magic... GVM is definitely not in par with Mani or tarantino, but at the same time he is a million time better than the MASS/Commercial film makers of Tamil cinema. If he could just stop his influence over all characters, then he might come with a good product.


    BTW,
    VTV can be watched for its BGM & songs(why the hell no one has any say about manipayaa song???) Cinematography(silhouettes & song sequences esp),some scenes between The lead pair, for the gorgeous & sexy (in saree) Trisha!!!, underplayed Simbu, jesse's character which depicts the wavery mind of today's independent women etc..

    I watched Asal & vettaikaran in cinemas :( & when i see a normal love story like this, i am left with no other options but to enjoy it & give it a red carpet treatment so as to encourage the film makers to come out with more films which are realistic..

    My rating: VTV 3/5
    +s - many things as mentioned above
    -s - Screenplay, Lack of crisp in direction

    Verdict - WATCH IT (you'll enjoy at least one scene!!)

    ReplyDelete
  3. @gan:
    Exactly the way i felt after the movie.. Watched it the first sunday, in Mayajaal, and was completely pi**ed off.. The worst part was when everyone (esp my FB friends) were hailing it as an epic movie of sorts.. Good thing i have a genius backing my viewpoint..:)

    @goks:
    which scene? :P

    ReplyDelete
  4. //why the hell no one has any say about manipayaa song???//
    I liked it because of Rahman's voice in it. Hell. Whenever his voice enters the ear drum, im flushed with goosebumps. "Ay hairathey" from Guru is another one. kadaisila avan kural varumbothu.. wow.! :-o

    //underplayed Simbu//
    As i mentioned, both simbu and trisha acted as puppets. If you observe carefully, their conversations resemble the dull boring ones between Kamal and Jo in Vettaiyadu Vilayadu. Itukku avana viral pinna vitrukkalaam.

    //I watched Asal & vettaikaran in cinemas//
    Ithukkagave un comment ah spam la podanum. :-/

    @Arjun
    ya. Its too irritating and exasperating to see these downright stupid films getting such accolades.

    ReplyDelete