Trailerகளைப் பார்த்த போது frame-by-frame liftஓ என்று mild ஆக ஒரு doubt எழுந்தது. பலர் "A Wednesday" பார்த்திருப்பார்கள். இருந்தும் எல்லா இடங்களிலிருந்தும் உ.போ.ஒருவனுக்கு நல்ல response. "WATCH UPO!! NOW!!" - ஒரு ஆர்குட் tagline அலறியது. கமல் மேல் நம்பிக்கை வைத்து சங்கம் Cinemasஉக்கு கிளம்பினேன்..
ரொம்ப disappointing. ஆரம்பத்தில் இருந்த பயம் ஊர்ஜிதமானது. அட்ட காப்பி. சுட்ட காப்பி. சின்ன சின்ன உதிரி சீன்களைக் கூட விட்டு வைக்க வில்லை. "டேய்! பிள்ளையார் சுழியக் கூடவாடா காப்பி அடிப்ப?!"- விவேக் காமெடி ஞாபகம் வருகிறது. சிரிக்க தான் மனதில்லை. பிள்ளையார் சுழி, பார்டர், செமி கோலன் எல்லாம் perfectஆக காப்பி அடித்திருக்கிறார்கள் சரி.! முக்கியமாக எடுத்திருக்க வேண்டிய இடத்தில் கோட்டை விட்டு originalityஐ புகுத்துகிறேன் என்று சொல்லி சொதப்பி இருக்கிறார் கமல்.
"A Wednesday"இன் Common Manஐ செலுத்தியது பயம், "எவனோ என் சாவை நிச்சயிக்கிறானே!!" என்ற கோவம், அரசாங்கம் கையைப் பிசைந்து கொண்டு நிற்கிறதே என்ற எரிச்சல் . எந்த ஒரு common manஉக்கும் வரும் எண்ணங்கள் இன்னும் intenseஆக இருக்கிறது இந்த Common Man நசீருக்கு.
"இதெல்லாம் ஏன்?" கமிஷனர் கேட்கிற போது அவற்றை வெளிக் காட்டும் பகுதி தான் நசீர், கமல் இருவருக்கும் தங்கள் நடிப்புத் திறனை வெளிக்கொண்டுவர திரைக்கதை அனுமதிக்கிற பகுதி. மற்றபடி படம் காட்டு வேகத்தில் பயணிக்கிறது. நின்று நடிக்க சமயம் இல்லை எவருக்கும் (மோஹன் லாலை நடிக்க வைத்தது கமிஷனர் பதவிக்கு முக்யத்துவம் தருவதற்கே. நடிப்பதற்கு stuff உள்ள role போல தெரியவில்லை.) அப்படி வெளிக்காட்ட வேண்டிய கட்சிகளில் நசீர் மின்னுகிறார். கமலின் நடிபபு எப்போதும் போல் awesome என்றாலும், அவர் கூறும் காரணங்களான "குஜராத்தில் ஒரு பெண்ணை அம்மணமாக ஓட விட்டு.... " என்று போகும் வசனங்கள் இவன் common manஆ? சமூகப் போராளியா என்று குழம்ப வைக்கிறது. 'உன்னை போல் ஒருவனின்' definitionஐ மீறுகிறது. உண்மை என்னவென்றால் நாம்(தமிழகம்) தீவிரவாதத்தால் பெரிதாக பாதிக்கப் படுவதில்லை. டிவி சேனல்களில் பார்த்து தெரிந்து கொள்வதோடு சரி. பார்த்துவிட்டு தூங்கப் போகும் முன் கொஞ்சம் தேச பக்தி, தீவிரவாதிகள் மேல் கொஞ்சம் எரிச்சல். அடுத்த நாள் எப்போதும் போல், "பால் வந்தாச்சா உமா?". மும்பையில் அப்படி இல்லை. தீவிரவாதத்தால் அவ்வப்போது பாதிக்கப் பட்டுக் கொண்டே இருக்கின்றனர் அங்குள்ளோர். அந்த common manவேறு. இங்குள்ள common man வேறு. எனவே "A Wednesday" இன் கருவை மட்டும் எடுத்துக் கொண்டு, இங்குள்ள பொது ஜனத்தின் பிரச்சனைகளில் முக்கியமான அதே நேரத்தில் horror-friendly ஆன ஒரு விஷயத்தை எடுத்து கொண்டிருந்தால் இந்த flaws வர வாய்ப்பிருந்திருக்காது. "The more ethnic it is, the more universal it gets", என்று கமலே கூறியுள்ளார். (உதாரணத்திற்கு மதுரையில் ரெகுலராக நடக்கும் வெட்டு குத்துகளால் பாதிக்க படும் ஒரு common manஐ மையமாக எடுத்துக் கொண்டிருக்கலாம்.) இதற்கெல்லாம் கொஞ்சம் ஹோம்-வொர்க் செய்திருக்க வேண்டும்.
அவசரமாக ஹிட் தேவை பட்டதோ என்னவோ, சுயமாக எதுவும் பெரிதாக செய்யாமல் ஹிந்தி பட backgroundஇல் தமிழ் நடிகர்களை உலவ விட்டிருக்கிறார்கள். இரா.முருகன் (உ.போ.ஒ வசன கர்த்தா) ஜூ.வியிலோ ஆ.வியிலோ சொன்னார், திரைக்கதை இருபத்து நாட்களில் முடிந்தது என்று. தெரியுது! :-x
மோஹன் லால் லக்ஷ்மி இடையே நடக்கும் cold war; "இந்த Systems எல்லாம் பயங்கர பழசு! 'அபிவாதயே!' சொல்லிட்டு ஆரம்பிக்கறேன்" போன்ற சில வசனங்கள் ஆறுதல் அளிக்கும் வித்யாசங்கள் . ஹும்!
original வெர்ஷனை பார்க்காதவர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்; பார்த்து கமல் மேல் பெரிதாக ஈர்ப்பு இல்லாதவர்கள் "சொன்னேன்ல?!" என்பார்கள். Original வெர்ஷனை பார்த்து கமல் மேல் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் வைத்திருந்த "என்னை போல் ஒருவனுக்கு" இது ரொம்ப பெரிய disappointment.
996. How to have the perfect beard look
6 years ago
.jpg)
adra sakka!
ReplyDeletemadan review unaku munnala thothuduchu!
hyundaila free time iruntha tv la film reviewer ah join pannu!:P
hmm. frankly it was a big turn off! Nee pathuttiya?
ReplyDelete'Motive missing' - appadingara point ah nalla elaborate pannirka Ganesh :) My satisfaction in the movie was - Kamal, naan atha pandraen itha pandraen nu sothappaama atleast original-ah kalangappaduthaama ozhunga adichurkaaney, athuvey periya vishayam thaan !
ReplyDeletewasnt that bad dog...
ReplyDeleteYou went with all those stupid expectations of yours & the film sucked just because of your damn expectations... REMEMBER THAT KAMAL IS AN ACTOR & HE DOES THAT ROLE IN A ELEGANT WAY.
As for the film, it was a good remake without spoiling the original essence of the hindhi version. A must watch for TAMIL audience... ;)
i felt kamal overacted in some scenes..thevaiye illama english pesaruthu..C4 nu solli thaan intellectual nu ulagathuku kamikarthu..he could hv underplayed just like he did in VV..
ReplyDelete